இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பினரும் உயர்நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமையகத்தில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இன்று காலை 10 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.