அஜித்குமார் நியூ லுக்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். படத்தின் தயாரிப்பினை போனி கபூர் மேற்கொண்டுள்ளார்.

வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி , வீரா போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு விரைவில் தலைப்பு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், அவ்வப்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது அஜித் வெண் தாடியில் கெத்தான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது. அஜித்துடன் நடிகர் ஆதியும் உள்ளார்.