அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலியிறுதிப் போட்டியில் முன்னணி வீர்ர் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார்.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலியிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவும் மோதினார்கள்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். போராடி தோல்வி அடைந்த ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து வெளியேறினார்.