மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரி மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகம். இதன் வளாகத்தில் உள்ள மரத்தில் 22 வயது மதிக்கத்தக்க பொறியியல் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் உத்தேஷ்யா அஹிர்வார் என்பவர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மாணவரின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.