தனக்கென்று ஒரு தனி வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் 'ஏர்பவர்’ என்ற வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்றை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான அறிவிப்புகள், படங்கள் எல்லாம் வெளியாகி வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முழு தரத்துடன் இல்லாததால் அதன் உற்பத்தி திட்டத்தை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. ஏற்கெனவே, பல சீன, கொரிய நிறுவனங்கள் வயர்லெஸ் சார்ஜிங் கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தி சந்தையில் விற்பனை செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தனது முயற்சியில் தோல்வி கண்டிருப்பது ஆப்பிளுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங்க்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.