Bigg boss update: பிக் பாஸ் 6 வீட்டிற்கு போகும் புது மாப்பிள்ளை... லிஸ்ட் தயார்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய 5 சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என தெரிகிறது. பிக் பாஸ் ஓடிடியை அடுத்து 6வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சிம்பு இல்லை கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களின் பெயர்கள் இப்போதிலிருந்தே அடிபடத் துவங்கியிருக்கிறது. விஜய் டிவி பிரபலம் நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் பாடகர் அல்லது பாடகி இருப்பதால் இந்த சீசனில் ராஜலட்சுமி கலந்து கொள்கிறார் என்ற செய்தியில் ஆச்சரியம் இல்லை.

பிக் பாஸ் 6 வீட்டிற்கு பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் அல்லது பாடகி ரம்யாவின் கணவரான டிவி நடிகர் சத்யா செல்லவிருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. நடிகை ஐஸ்வர்யாவை மறுமணம் செய்து கொண்ட கார்த்திக் குமார் தன் கெரியரில் பிசியாக இருக்கிறார். அதனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல சம்மதிப்பாரா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் 6 வீட்டிற்கு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி செல்லவிருக்கிறார் என்று கூட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒவ்வொரு சீசன் துவங்கும் முன்பும் டிடியின் பெயர் அடிபடுவது வழக்கமாகி விட்டது. அதனால் அதிகாரப்பூர்வ பட்டியலில் டிடியின் பெயர் வந்தால் மட்டுமே இந்த செய்தியை உறுதி செய்ய முடியும்.