'Cement price hike worry us'

தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் திடீரென சிமெண்ட் விலை ஏற்றியதால் கட்டுமான தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கோவை கட்டுமான தொழிலாளர்கள் சங்க தலைவர் கூறுகையில் ' விலை ஏற்றம் காரணமாக 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள கட்டிட பணிகள் முடங்கியுள்ளன. 340 ஆக இருந்த சிமெண்ட் மூட்டை விலை 380 ஆக உயர்ந்தது எங்களை போன்ற கட்டிட தொழிலை நம்பியிருக்கும் அனைவருக்கும் மிகப் பெரிய பின்னடைவே ஆகும். இந்த விலை ஏற்றம் ஜி எஸ் டி வரையறுத்த விலையை காட்டிலும் அதிகமாகும். மேலும் பெட்ரோல், நிலக்கரி என அனைத்தும் விலை குறைந்த நிலையில் சிமெண்ட் விலை ஏற்றம் எங்களை கவலை அடைய செய்துள்ளது.

மற்ற மாநிலங்களில் அல்லாத விலையேற்றம் தமிழகத்தில் மட்டும் இருப்பதால் தமிழக,மாநில அரசு கலந்து ஆலோசித்து தொழிலாளர்களின் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டுமென்பதே கட்டுமான தொழில் சங்கங்களின் கோரிக்கையாகும்.