சீன ஓபன் பேட்மிண்டன் - முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த சாய்னா நோவல்

சீனாவின், சாங்கு நகரில் நேற்று தொடங்கிய சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று இன்று தொடங்கியது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நோவல், தாய்லாந்து வீராங்கனை பூசனுடன் மோதினார்.

44 நிமிடம் நீடித்த இப்போட்டியில் 21-10, 21-17 என்ற நேர்செட் கணக்கில் பூசன், சானியாவை வீழ்த்தினார். உலக தரவரிசையில் சாய்னா 8 வது இடத்தில் இருக்கிறார். பூசன் 19 வது இடத்தில் இருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து வீராங்கனையிடம் 2 வது முறையாக தோல்வியடைந்த சாய்னா நோவல், சீனா ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.