சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2 வது சுற்றில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டனின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் பிவி.சிந்து, தென் கொரிய வீராங்கனை அன் சே யங் மோதினார்கள்.
பரபரபான இப்போட்டியில், 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை அன் சே யங் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். யாரும் எதிர்ப்பார்க்காத சிந்துவின் இந்த தோல்வி அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.