தனுஷின் திருச்சிற்றம்பலம்... அனிருத் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர் என பல திரைநட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் திருச்சிற்றம்பலம். ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

5 ஆண்டுகள் கழித்து தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் தாய்க்கிழவி, மேகம் கருக்காதா ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது பாடலை ஜூலை 27ம் தேதி வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு மாஸான போஸ்டருடன் அறிவித்துள்ளது.
முதல் இரண்டு பாடல்களை தனுஷ் பாடியிருந்தார். இந்நிலையில் மூன்றாவது பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த பாடல் ரொம்ப ஸ்பெஷலானது. அனிருத் பாடியிருக்கிறார். Life of Pazham பாடலை விவேக் எழுதியிருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.