ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மான் மோதினார்கள்.
இப்போட்டியில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார். அவருக்கு பரிசு தொகையாக ரூ.2.75 கோடியுடன், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.
இதே போல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) மோதினார்கள். இதில், ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது அவரது 5-வது சர்வதேச பட்டமாகும். அவருகு ரூ.10 கோடி பரிசுத்தொகையையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டது.