தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை ஜன்னல் வழியே எழுப்பும் யானை|வைரல் வீடியோ!!

காலையில் ஒவ்வொருவரும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் முறை, ஒவ்வொரு மாதிரி இருக்கும்; ஒவ்வொருவரும் எழுப்பப்படும் முறையும் வேறு மாதிரி இருக்கும். சிலர் அலாரம் அடித்து எழுவார்கள், சிலர் குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 முறையாவது அலாரமை அணைத்து அணைத்து எழுவர். சிலருக்கு யாராவது எழுப்பினால் தான் எழுந்திருப்பார்கள், சிலருக்கு தானாகவே விழிப்பு வந்துவிடும்.

ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை, இதுவரையில் இப்படி யாரும் எழுப்பியிருக்க மாட்டார்கள் என்பது போல் ஒரு இன்ஸ்டா பதிவு வெளியாகி, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த சாக்ஷி ஜெயின் என்ற பெண்ணை, ஒரு யானை ஜன்னல் வழியாக தனது தும்பிக்கையால் தொட்டு எழுப்பி விடுகிறது. யானை, தன்னை எழுப்பும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அந்தப் பெண்.அதில் 'ரிசார்ட் ரிசப்ஷனில் இருந்து அழைப்பு அல்லது அலாரம் மணிக்கு பதிலாக இந்த ரிசார்ட்டில் யானைகள் எழுப்பும். யானைகளோடு நெருங்கிப்பழகி நடக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும் அவற்றுடன் விளையாடவும் முடியும் என்பது இங்கே இன்னும் சிறப்பு. 'இந்த அனுபவம் வித்தியாசமானது.

தும்பிக்கையில் இருந்து காற்று என் மீது பட்டபோது, இந்த க்யூட்டி என்னை எழுப்பிக் கொண்டிருந்தாள்’ என செல்லமாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோ பதிவிட்டதில் இருந்து, இதுவரை சுமார் 53 மில்லியன் பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசித்துள்ளனர். 220,000 லைக்குகள் குவிந்துள்ளன. பலரும் வீடியோ பிரமிப்பாக உள்ளதாகக் கூறி தங்களுடைய கமென்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.