பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2 வது சுற்று போட்டியில், உலக சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் யோ ஜியா மின்னை (சிங்கப்பூர்) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.