மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்னதா? ஆதாரம் எங்கே..? – அண்ணாமலை

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூரில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை  உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்யும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து அது குறித்த பதில் இல்லை. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.