நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய திரையிலகின் முன்னணி நடிகையான இவர் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் குடும்பம் என்று இருந்த ஒரு வாரத்தில் ஜவான் படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார் நயன்தாரா.
விக்னேஷ் சிவனும் தான் இயக்கவிருக்கும் ஒலிம்பியாட் போட்டி, அஜித்தின் ஏகெ62 படத்தின் கதை வேலைகளில் இருந்து பிஸியாகினார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயனுடன் எடுத்த புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாராவுக்கென்றே பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தனி கணக்குகளை வைத்து அவரின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு பதிவில் நயன்தாரா, அஜித்குமாரின் அசல் படத்தில் ஒருசில க்ளாமர் காட்சிகளில் நடித்திருப்பார்.
அந்த புகைப்படங்களை ஒரு ஆபாசமான மீம் பக்கத்தில் பதிவிட்டதற்கு நயன் தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருக்கிறார். இதனை வைத்து விக்னேஷ் சிவனை கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
இவருக்கு எப்படிப்பா அஜித்குமாரின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.