காபித்தூளில் மகாத்மா காந்தியின் பிரம்மாண்ட சித்திரம்... கின்னஸ் சாதனையில் இடம்பெற விண்ணப்பம்!

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  காபித்தூளில் காந்தியடிகளின் பிரம்மாண்டமான உருவத்தை சித்திரமாக்கும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சாதனையை கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணவ்ப்பிக்கப்பட்டுள்ளது.

74வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் சிவராமன் என்பவர் காபித்தூளில் மிகப்பெரிய மகாத்மா காந்தியின் சித்திரத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டார். காபித்தூளைக் கொண்டு மகாத்மா காந்தியின் வழக்காமான புன்னகையுடன் கூடிய அழகான மிகப் பெரிய சித்திரத்தை அவர் 24 மணி நேரத்தில் வரைந்து சாதித்துள்ளார். இந்த சித்திரத்தின் மூலம் அவர் முந்தைய கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியை ராதா ஸ்ரீகாந்த், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினத்தைக் கொண்டாட மாணவர்களைப் பள்ளிக்கு அழைக்க முடியாத சூழலில் இந்த வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.