குரங்கம்மை கொப்பளம் ஆண்குறியில் வந்தால் எப்படி இருக்கும்? வைரலாகும் பாதிக்கப்பட்டவரின் பேச்சு

2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பது கண்டறியப்பட்டது.

ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரது முக்கிய பிரச்னை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின.

"இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்," என்று அவர் தனியார் செய்தி நிறுவனத்தினரிடம் கூறினார். "எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்."

பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும்.

மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம்.

தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதாலும் பயன்படுத்துவதாலும் நோய் பரவும்.
தியாகோவின் அறிகுறிகள் ஜூலை 10ம் தேதி அன்று தொடங்கியது. "முதலில் நான் கடுமையான குளிரை உணர்ந்தேன், அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் பொதுவாக ஏற்படும் அசெளகரியம் ஏற்பட்டது. என் உடல் முழுவதும் நொறுங்கியதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

"இது காய்ச்சலாகவோ அல்லது கோவிட் -19ஆகவோ இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அடுத்த நாள், நான் குளிக்கும்போது, ​​​​என் முதுகிலும் ஆண்குறியிலும் புண்கள் இருப்பதை முதலில் கவனித்தேன்."

அப்போது முதல், தியாகோ தனது கால்கள், தொடைகள், கை, வயிறு, மார்பு, முகம் மற்றும் ஆணுறுப்பில் புண்கள் இருப்பதைப் பார்த்தார்.

"இது கிட்டத்தட்ட வீங்கிய, வலிமிகுந்த பருக்கள் போன்றது," என்று அவர் கூறுகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தொடர்பு கொண்ட நண்பருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

ரத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனைமேற்கொண்டார். அது நெகட்டிவ் என்று வந்தது.

""மருத்துவமனைக்கு செல்ல எனக்கு சில நாட்கள் பிடித்தது. ஏனென்றால் வலி மிகவும் கடுமையானதாக இருந்ததால், ஆடைகளை அணிய முடியவில்லை.  கார் பயணம் கூட வலியையும் வீக்கத்தையும் மிகவும் மோசமாக்கியது.

"மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அழற்சி எதிர்ப்பு, வலி ​​மருந்து மற்றும் ஒரு மயக்க மருந்து, இது எரிச்சல் ஏற்படும் உணர்வை போக்கியது" என்கிறார்.

அந்த மருத்து உதவுகிறது. ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அது வேலை செய்வது நின்றுவிடும் மீண்டும் புண்களில் வலி  ஏற்படும்," என தியாகோ மேலும் கூறுகிறார்.