பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் - முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஓசாகா

ஜப்பானில் நடைபெற்று வந்த பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா, ரஷியாவின் அனஸ்டாசியா பாவ்லிசென்கோவாவ் மோதினார்கள்.

69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பாவ்லிசென்கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2016, 2018-ம் ஆண்டுகளில் இந்த போட்டியில் 2-வது இடம் பிடித்த நவோமி ஒசாகா சொந்த மண்ணில் முதல்முறையாக பட்டத்தை வென்றுள்ளார். இந்த ஆண்டில் நவோமி ஒசாகா வென்ற 2-வது பட்டம் இதுவாகும்.

சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஓசாகாவுக்கு 470 தரவரிசை புள்ளியுடன் ரூ.1 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற பாவ்லிசென்கோவா ரூ.54 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.