Rafel Nadal won Outer Final for America Open Tennis

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், இன்றைய காலியிறுதி போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜெண்டினாவின் டியாகோ சுவர்ட்ஸ்மேன் மோதினார்கள். 

2 மணி நேரம் 46 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் டியாகோவி வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 8 வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு காலியிறுதி போட்டியில், பிரான்ஸ் நாட்டின் மன் பில்ஸ், இத்தாலி நாட்டின் மேட்டேரி பெரிட்டினி மோதினார்கள். இதில், பெரிட்டினி 3-6, 6-3, 6-2, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் மான் பில்சை வீழ்த்தி முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி ஆட்டத்தில் நடால் - பெரிட்டினி மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் மெட்வதேவ் (ரஷியா)- டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.