இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்ட பென்சிக், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதினார்கள். பரபரப்பான இப்போட்டியில், பியான்கா 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில், அமெரிக்கவின் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா சுவிட்டோலினாவை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் நாளை மறுநாள் (செப்.8) நடைபெறும் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், பியான்கா அண்ட்ரீஸ்கு மோத இருக்கிறார்கள். 19 வயதாகும் பியான்கா முதல் முறையாக அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்க, 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்புடன் செரீனாவும் ஆக்ரோஷத்தோடு விளையாடுவார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.