நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்- மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன்  எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்

நடிகர் தனுஷ் தற்போது இப்போது தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அண்மையில் ஹாலிவுட்டில் தயாரான தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது, இதில் நடித்த தனுஷிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அடுத்து தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என்கின்றனர்.

மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த தனுஷ் தனது மகன்களை மட்டும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அழைத்து செல்கிறார். அப்படி அண்மையில் அவர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரது மகன்களும் உள்ளனர். அது என்ன நிகழ்ச்சி என்றால் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு 70வது பிறந்தநாள் என்பதே.

அப்பா, அம்மா, அண்ணன் குடும்ப என அனைவருடனும் தனுஷ் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.