விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை தவிர்க்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.
கட்டடங்களுக்கன விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உயரமான மற்றும் பல மாடி கட்டடங்களுக்கு ஆய்வு செய்து அனுமதி அளிக்க CMDA துணைத்தலைவர் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் குழு உறுப்பினர்களாக நியமனம்
உயரமான கட்டடங்கள் மற்றும் பல மாடி கட்டடங்கள் கட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை குழு ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் - அரசு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18.3 மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள் உயரமான கட்டடங்களாக கருதப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.