டென்னிஸ் உலக தரவரிசை பட்டியல் - இந்திய வீரர் சுமித் நகால் முன்னேற்றம்

ஏடிபி சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னி போட்டி அர்ஜ்னெடினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அர்ஜெண்டினாவின் பகுண்டோ போக்னிஸ், இந்தியாவின் சுமித் நகால் மோதினார்கள்.

1 மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி நகால் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை நகால் பெற்றார்.

மேலும், இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் உலக தரவரிசையில் 161-வது இடத்தில் இருந்த சுமித் நகால், 26 இடங்கள் முன்னேறி 135 வது இடத்தை பிடித்துள்ளார்.