உலகநாயகன் குரல் பதிவில் தமிழர்களின் பண்டையகால வரலாறு… பாராட்டினை பொழியும் ரசிகர்கள்!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாறு மிக அற்புதமாக எடுத்துரைக்கப்பட்டது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் கோலாலமாக தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.
அதில், நமது பண்டைய மன்னர்கள் , சோழர்கள், சேரர்கள், பாண்டிய மன்னர்கள் குறித்த வரலாறு, ஜல்லிக்கட்டு, கல்லணை என கமல் குரல் ஆங்கிலத்தில் பிரமாண்டமாய் ஒலிக்க, அதற்கேற்றாற் போல நடன கலைஞர்கள் அற்புதமாக நடனமாடி, நடித்து காட்டி அதற்கேற்ற திரை அமைப்பு செய்து மிரட்டலாக பண்டைய வரலாறு உலகுக்கு பகிரப்பட்டது.

இந்நிகழ்வு நேற்றைய கொண்டாட்டத்தில் முத்தாய்ப்பாய் அமைந்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.