ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் துருக்கி டார்டனெல்லஸ் ஜலசந்தியில் உலகிலேயே நீளமான தொங்கு பாலம் நேற்று திறக்கப்பட்டது. இந்த பாலத்தை துருக்கி ஜனாதிபதி மற்றும் தென் கொரியாவின் பிரதமர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த பெருமைமிகு விழா தொடர்பாக,துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் கூறுகையில்: “துருக்கியின் ஐரோப்பிய மற்றும் ஆசிய கடற்கரைகளை இணைக்கும், 1915 கேனகேல் பாலம் துருக்கிய மற்றும் தென் கொரிய நிறுவனங்களால் 2.5 பில்லியன் யூரோக்கள் (2.8 பில்லியன் டாலர்) முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
முதலீடு,தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதிகளில் நமது நாட்டை முன்னெடுப்பதில் இவை ஒரு பெரிய பங்கை கொண்டுள்ளன.” என பெருமையுடன் தெரிவித்தார்.