தன்னைக் காண கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்: அஜித் செய்த நெகிழ்ச்சியான காரியம்.!

மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ஆயுதப்படை ரிசர்வ் கேம்பஸில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார் மொட்டை மாடியிலிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது.

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டிக்காக சென்றிருந்த நிலையில், அவர் அங்கிருக்கும் விஷயம் தெரிந்து திருச்சி ரசிகர்கள் குவிய தொடங்கினர். அவரை நேரில் பார்க்க மிகப்பெரிய கூட்டம் கூடியது. ரைபிள் கிளப்பில் இருந்த அஜித்தும் காலை முதல் மாலை வரை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பொறுமையாக புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார்.

அதன்பின்னர் ரசிகர்கள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தெரிந்து மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். குழுமியிருந்த ரசிகர்களுக்கு இரு கைகளை சேர்த்து முத்தமும் கொடுத்தார். அப்போது அங்கு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்ற ரசிகர்களை நோக்கி இறங்கச் சொல்லி சைகை செய்தார். உடனே ரசிகர்கள் அஜித்தின் குறிப்பை உணர்ந்து உடனடியாக மின்மாற்றியை விட்டு கீழே இறங்கினர்.

அதன்பின்னரும் ரசிகர்கள் அஜித்துக்காக காத்திருக்க போலீஸ் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து ரசிகர்கள் அங்கிருந்து கிளம்பினர். பின்னர் மீண்டும் அஜித் ரசிகர்களை சந்தித்தார். அப்போது கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்மணியை காவல்துறை ஒத்துழைப்புடன் அஜித்குமார் பர்சனலாக சந்தித்தார்.

அப்போது அந்த பெண்மணியின் மற்றொரு குழந்தையை தோளில் தூக்கி கொஞ்சினார். அஜித்தின் இந்த செயலால் நெகிழ்ச்சியான குடும்பம் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயினர். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.