மாணவியிடம் அத்துமீறல் – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது!

மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.