நடுரோட்டில் பயில்வானுடன் சண்டை போட்டது ஏன்.? ரேகா நாயர் பதில்

இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் குறித்து யூடிப் சேனல்களில் தரக்குறைவாக பேசுவதாக ஏற்கனவே சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவின் நிழல் பட விமர்சனத்தில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார் பயில்வான்.

இது தொடர்பாக நேற்றைய தினம் திருவான்மியூர் பீச்சில் பயில்வான் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ரேகா நாயர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் எழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை விலக்கி விட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக ரேகா நாயர் தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் எப்படி நடிச்சா இவருக்கு என்ன? நான் அம்மணமாவே நடிச்சிருந்தாலும் அதை கேட்க இவர் யார்? என் வீட்டுக்காரர் என்னை வெளிய அனுப்பிட்டா இவர் என்னை பார்த்துப்பாரா? எந்த நடிகையை பார்த்தாலும் இவர் கூட போனா? அவர் கூட போனான்ன்னு பேசுறார். ஒரு தராதரம் இல்லையா? இவரா எல்லாருக்கும் விளக்கு பிடிச்சாரு. சித்ரா பற்றி பேசுனா அவுங்க எனக்கு தோழி ஆகிருவாங்களா?

ஆல்ரெடி போலீஸ் கிட்ட நான் புகார் கொடுத்தேன். ஆனா அவுங்க ரெஸ்பான்ஸ் பண்ல. அவுங்ககிட்டயே நான் சொல்லிட்டேன். ரோட்ல பார்த்தா நான் அவரை அடிப்பேன். அப்போ யாரும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு. அதே மாதிரி ஏதேச்சையா பீச்ல பார்த்தேன். அதுனால நான் போய் விளக்கம் கேட்டேன். இவ்வாறு சண்டைக்கான தன்னுடைய விளக்கத்தை கூறியுள்ளார் ரேகா நாயர்.