டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என அடுத்தடுத்த இரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளை கொடுத்து அடுத்ததாக சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
கணித விஞ்ஞானியான விக்ரம் தனது கணித புதிர்களின் மூலம் பல கொலைகளின் காரணங்களை கண்டறிகிறார். அவருக்கு சவால் தரும் வகையில் வில்லன் போடும் அத்தனை திட்டங்களையும் அவர் முறியடிப்பதாக டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டீசர் இன்று காலை வெளியாக இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததில் இருந்தே சமூக வலைதளங்களில் சீயான் விக்ரம் மற்றும் கோப்ரா ஆகிய ஹேஷ் டேக்குகள் வைரல் ஆகி வருகின்றன.
https://www.youtube.com/watch?v=8ScCLfGGOPY&t=45s