கிரிமினல்களுடன் ஸ்டாலின்

தமிழகத்தில் மிக தீவிரமான குற்றங்களில் குற்றவாளிகளாக இருக்கும் குற்றவாளிகள் திமுகவில் தான் அதிகம் இருக்கிறார்கள். பல மோசடிகள் மூலம்  பெறப்பட்ட பணத்திலிருந்து தான் கட்சியே நடத்தப்படுகிறது.

வாரிசு அரசியல் நடத்தி, தங்களின் உறவினர்களுக்குப் பதவி கொடுத்து அதன்மூலம் பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த திமுக, அவர்கள் மீது வழக்கு என்றால் சட்டரீதியாக சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள். அதில் முதலில் இருப்பது ஆ.ராசா மற்றும் கனிமொழி தான்.

மேலும், தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினரை திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் கோபத்தையும் வரவழைக்கிறது. தன்னைச் சுற்றி கிரிமினல்கள் உள்ளனர் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டு பேசுகிறாரா என்கிறார்கள் பொதுமக்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் இந்த குற்றவாளிகளோடு அரவணைத்துக்கொண்டும் தழுவிக்கொண்டும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள்.

புகைப்படம் - 12ஜி வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கட்டுகட்டான பணம் துரைமுருகன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டால் அந்த தொகுதியில் தேர்தலே தள்ளிப் போனது. மேலும், இந்த வழக்கு உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, டிசம்பர் 21, 2017 அன்று குற்றச்சாட்டுக்ளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை என தீர்ப்பு கூறினார்.

ஆனால், இந்த தீர்ப்பிற்கு எதிராக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர்நீதிமன்றத்தில் 2018 மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அக்டோபர் 5, 2020 அன்று விசாரணை தொடங்கியது.

புகைப்படம் - 2நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிப்போனது. அதற்கு காரணமே துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாக வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கோடி கணக்கான பணம் பிடிபட்டது.

புகைப்படம் - 3Aircel, Maxis ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதிமாறன், ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய பின்னர், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742.58 கோடி அளவிற்கு முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது.

புகைப்படம் - 4

நங்கநல்லூர் வீட்டுவசதி சங்கத்தில் நடந்த டெண்டர் ஊழலில் பல கோடிகள் சுரண்டல், பத்திரிகையாளர்களைக் கேவலப்படுத்தியது மட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்டோரைத் தவறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியானார். திமுக ஆட்சி இல்லாதபோதே இப்படி பேசுகிறார் என்றால், திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் இன்னும் எப்படி பேசுவார்.

புகைப்படம் - 5தன் கல்லூரிகளில் ஐடி ரெய்டு மற்றும் பல ஆயிரம் கோடி ரூபாயை இலங்கையில் முதலீடு செய்ததாக ஜகத்ரட்சகனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜகத்ரட்சகன் முதலீடு செய்யவில்லை எனவும், அதிலிருந்து விலகிக் கொண்டதாகவும் தேர்தல் அதிகாரி கூறியதற்கு சான்று அளிக்குமாறும், அவர் மீது புகார் அளிக்கவும் பா.ம.க நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கியது.

புகைப்படம் - 6நிலமோசடி வழக்கில் சுப்பிரமணியன் மீது ஒரு குற்றச்சாட்டும் உண்டு, அதனால் அவர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவியின் பெயரில் பல நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டது. "Money Laundery" வழக்கில் அவர் மீதி CBI வழக்கு பதிவு செய்துள்ளது.

இப்படி பல நபர்கள் ஸ்டாலினை சூழ்ந்திருக்க அதை மூடி மறைக்கவே ஆளுங்கட்சியனர் மீது பொய்யான பிரச்சாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் கூறி வருகிறார்கள். பிரியாணி கடை முதல் அழகு நிலையம் வரை வன்முறையைக் கட்டவிழ்க்கும் திமுக, பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல் பொதுக் கூட்டங்களிலோ, கிராம சபைகளிலோ பெண்களைத் தவறாக நடத்துவது, மேலும் இவரது கட்சியில் உள்ளாட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே பெண்களைப் பகடைக் காயாக உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்று பெரும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுபோன்ற இன்னும் பெண்களுக்கு எதிராக பல செயல்களை செய்து வரும் இவர்கள் வந்து பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களா? என்று பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் தன்னிடம் இருக்கும் பதவி பலத்தையும், பண பலத்தையும் வைத்து அனைத்து வழக்குகளையும் தங்களுக்கு சாதகமாக்கி சட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளையும் அடைத்து தாங்கள் குற்றவாளிகளே இல்லை என்ற தீர்ப்பை வாங்கி விடுவார்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Stalin, Mkstalin, Dmk, Tent of criminals, Criminals